Sunday, November 13, 2005

மூட பரமா!


ஏக்கமா?
பசியா?
வேறேதும் இரணமா?
எதற்கென்றே தெரியாமல்
விழி நிறைந்த கண்ணீர்
ஏன் ஏந்துகிறோம்?
தெரியாமலேயே
முன் நீளும் பிஞ்சுக்கரம்
நாம் மட்டும் ஏனிப்படி
கேட்கவேண்டும்
என்றுகூட தோன்றாமல்
எச்சில் இலை நக்கும்
உரிமை பூ
உதிர்ந்த காம்புகள்!
ஏன்
அடிக்கப்படுகிறோம்?
நசுக்கப்படுகிறோம்?
விளங்காமலேயே
காம அரக்கனின்
கோரப்பல்லிடை சிதையும்
இளங்கன்றுகள்.

எத்தனையோ கோடி
இன்பம் வைத்தாயாமே பரமா!
அதில்
இவர்களுக்கான பங்கினை வழித்து
மொத்தமாய் யார் இலையில்
குவித்தாய்
சொல்லடா பரமா?
இன்பங்களின்
இவர் பங்கினை மறுத்தாய்
பரவாயில்லை
எவனெவனோ இன்பஞ்சுகிக்க
இவர்களையே ஏனடா
பந்திவைத்தாய்
மூட பரமா?

பிறன் தேவைக்கு
வண்ணஞ்சுரண்ட
முளைக்கும்போதே
பிய்க்கப்படும் வண்ணச்சிறகுகள்
தாம்
பட்டாம்பூச்சிகள் என்பதறியாமலேயே
தமக்கு
சிறகென்ற ஒன்று
உண்டென்பதறியாமலேயே
புழுக்களைக்கூட
ஏக்கமாய் பார்த்து
தவிதவித்து
துடிதுடித்து
தரையில் கிடக்கும்
உயிர்ப்பிண்டங்கள்!

3 Comments:

Blogger inlivenout said...

I had always wondered why there is so much misery around when the world could've been a far better place;Its been sometime since I learnt,it depends on how I look at this world;how I intend to make it a better place to live.
Ruthran avargal yezhudhiadhu nyabagam varugiradhu-"Inbuttriru. Inbuttrirukkave munai.sugam sulabam.poi,purattu,pagarkanavugalaiyum meeri ulagam azhaganadhudhaan". How true!

Thu Jan 19, 12:11:00 PM PST  
Blogger கீதா said...

நிஜமான கோவம்
நியாயமான கேள்வி
நனிநன்று

"இவர்களுக்கான பங்கினை வழித்து
மொத்தமாய் யார் இலையில்
குவித்தாய்
சொல்லடா பரமா?"

அருமையான வரிகள்.

கவிதையாக மட்டுமே பார்க்க முடியவில்லை. அவ்வப்பொழுது எழும் உள்ளத்துக் குமுறல்தான்.. ஏனிந்த பிரிவினைகள்??.. ஏனிப்படி?? உள்ளம் குமுறினாலும் காலத்தின் சுழலில் சிக்கி நாமும் பயணிக்கவேண்டியிருக்கிறது..ஹ்ம்.

Mon Jan 23, 09:32:00 AM PST  
Blogger sathesh said...

//உள்ளம் குமுறினாலும் காலத்தின் சுழலில் சிக்கி நாமும் பயணிக்கவேண்டியிருக்கிறது..

..நிஜம்தான் கீதா

Tue Jan 24, 07:21:00 AM PST  

Post a Comment

<< Home