Sunday, January 15, 2006

நாளை!

இன்று முடிந்தால்
நாளை வருமென
காத்திருந்தேன்
கனவு தேய்ந்து
நான்
மெல்ல விழிக்கையில்
அழகுடன் பூத்திருந்தது
காலை!

நாளை வந்ததென
குதித்தெழுந்தேன்
வெளியே
கண்சிமிட்டி நின்றது
அதே இன்று!

ஏதும் புரியாமல்
நின்றேன்
'இது இன்றா நாளையா?'
போவோரைக் கேட்டேன்
இன்றென்றார்
இன்று முடிந்தால்
வரும்
நாளையென்றார்

பல
இன்றுகளாய் காத்திருக்கிறேன் - என்
நாளையை எதிர்பார்த்து - ஆனால்
இன்று முடிந்தும்
மீண்டும்
இன்றே வருவதேன்?

12 Comments:

Blogger Unknown said...

mmmm... ethanai perukkul irrukkum kelvi ithu.. nalla irrukku

Mon Jan 16, 03:22:00 AM PST  
Blogger sathesh said...

தங்கள் வருகைக்கு நன்றி தேவ்

Mon Jan 16, 08:34:00 AM PST  
Anonymous Anonymous said...

Hi

Very good , it explains to me the expectations we always have towards tomorrow and not willing to live today.

Well writtern please keep it up
Srivats

Thu Jan 19, 08:01:00 AM PST  
Blogger sathesh said...

thanks for sharing your comment srivats

Sat Jan 21, 03:09:00 AM PST  
Blogger sathesh said...

வருகைக்கும் தங்கள் எண்ணத்தை பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி பெண்மதி

Sat Jan 21, 03:14:00 AM PST  
Blogger sathesh said...

வருகைக்கும் தங்கள் எண்ணத்தை பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி feman

Sun Jan 22, 10:59:00 AM PST  
Anonymous Anonymous said...

நேற்றின் நாளையும்
நாளையின் நேற்றும்
இன்றுதான்

இன்றில்தான்
நாளையும் இருக்கிறது
நேற்றும் இருக்கிறது

ஆம்
நாளைய வெற்றியின்
அஸ்திவாரமும்
நேற்றைய செயல்களின்
பலன்களும்

பி. கு : நீங்க நேத்து செய்த செயல்களின் பலன் தான் உங்களின் இன்று. நீங்க இன்று செய்யப்போற செயல்களின் பலன்தான் நாளை. உங்கள் நாளை எப்படி இருக்க வேணுமோ அப்படி நீங்க உருவாக்க முடியும். அது உங்க கையிலதான் இருக்கு.

Mon Jan 23, 09:10:00 AM PST  
Blogger கைப்புள்ள said...

நல்லா இருந்துச்சுங்க!

Mon Jan 23, 06:52:00 PM PST  
Blogger sathesh said...

வருகைக்கும் தங்கள் எண்ணத்தை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி கீதா...

Tue Jan 24, 06:52:00 AM PST  
Blogger sathesh said...

கைப்புள்ள:மிக்க நன்றி...

Tue Jan 24, 07:00:00 AM PST  
Blogger sathesh said...

நன்றி மறைக்காடன்
பாழ் - பூஜ்ஜியம்,சூன்யம்,இன்மை
சித்தாந்தம், கொள்கை, அர்த்தம், தேவை என எனக்கென்று எதுவும் கொள்ளாத ஒரு வாழ்க்கை அல்லது ஒரு உணர்வு நிலை நோக்கி ஒரு பயணம்

Thu Feb 02, 04:04:00 AM PST  
Blogger Raghavan alias Saravanan M said...

பாழ் - பெயரே வித்தியாசமாய் இருக்கிறது...

எனினும் ஒரு எதிர்மறை எண்ணத்தைத் தோற்றுவித்தது என்னவோ உண்மை..

நல்லதொரு கவிதை...

வாழ்த்துக்கள்..

Sun Aug 06, 11:44:00 PM PDT  

Post a Comment

<< Home