Friday, January 20, 2006

உதிரும் உறவு!

இருத்தலுக்குப் போராடி
போராட வலுவின்றி
சோர்ந்தது...

விடு
என்றபடி
இரணமின்றி கிடந்தது
கிளை...

விழுதல்
நன்மையே என்பதால்
மகிழ்ந்தே நின்றது
மரம்...

பாவம்
தேவையின் கைவிடலுக்கு
இலக்காகி
காற்றின் இழுப்புக்கு
இறையாகி
அரற்றியபடி...
நேற்று
உறவுக்குத் தளிராகி
இன்று
உறவுக்காகச் சருகாகி

உதிர்ந்தது

ஒரு சோக கவிதையாய்
உறவை தொலைத்த
இலை...

7 Comments:

Blogger sathesh said...

தங்கள் வருகைக்கு நன்றி ஆர்த்தி

Sat Jan 21, 08:13:00 AM PST  
Blogger Unknown said...

அருமை... இன்னும் முயன்றால் வலிகளின் ஊடே திரியும் வழிகளை கவிதையாய் கட்டாயம் சொல்லலாம்... என்ன சொல்லுகின்றீர்கள்.

Sun Jan 22, 09:34:00 PM PST  
Blogger அனுசுயா said...

கவிதை நன்றாகவுள்ளது.

Mon Jan 23, 03:23:00 AM PST  
Blogger sathesh said...

அனுசுயா,தங்கள் வருகைக்கு நன்றி

Mon Jan 23, 03:46:00 AM PST  
Blogger sathesh said...

தேவ்,..நிச்சயம் சொல்லலாம், ஆனால் அதற்கு அனுபவ முதிர்வும, தெளிந்த சிந்தனையும், வலிகளின் ஆணி வேரை கண்டறியும் நுணுக்கமும் வேண்டுமே..

Mon Jan 23, 07:38:00 AM PST  
Anonymous Anonymous said...

just wonderful.
வாழ்த்துக்கள். உணர்ந்தவனால் மட்டுமே இப்படி எழுத முடியும் என நினைக்கிறேன்
-சக்தி

Fri Mar 31, 07:44:00 AM PST  
Blogger sathesh said...

தங்கள் வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி சக்தி...

Sat Apr 01, 12:08:00 AM PST  

Post a Comment

<< Home