Thursday, February 02, 2006

பிஞ்சு மலர்கள்

கிழிந்து விரிகின்றன
பிஞ்சு மலர்கள்

மலரென்ற ஜென்மம்
பாவமாக
மலர்கின்ற அனுபவம்
சோகமாக

எச்சில் கன்னத்தில்
தூய கண்ணீர்
நிலைகண்டு நொந்ததோ
வலிகண்டு நொந்ததோ
இரணங் கண்டு
வடிந்தென்ன - அதையும்
காமங் கொண்டுதானே
நக்கும்
மலம் மேயும் பன்றிகள்...

5 Comments:

Blogger Unknown said...

பாழ்... இந்தக் கவிதையோடு மனம் ஒத்துச் செல்ல மறுக்கிறது... திணிக்கப் படும் சோகம் திகட்டுமோ??

Thu Feb 02, 10:32:00 PM PST  
Anonymous Anonymous said...

பாழ்..

எனக்கு கோபம் கோபமா வருது..!
:-(
புரிந்த மாதிரி இருந்தது..
கடைசியில் புரியவே இல்லை..
எத்தனை தடவை வாசித்தும் புரிய
மாட்டேங்குது :-(

நேசமுடன்

-நித்தியா

Sun Feb 05, 12:32:00 AM PST  
Blogger sathesh said...

தேவ்..சிலருக்கு அனுபவமாய் திணிக்கப்பட்டதை திணிக்கிறேன்.. வார்த்தைகளுக்குள் உணர்வை அல்ல உணர்வுக்குள் வார்த்தைகளை..உணரப்பட்ட இரணங்களை உணரப்பட்ட விதத்தில் படைத்துவிட்டேன்..

வெளிப்படையான தங்கள் எண்ண பகிர்விற்கு நன்றி தேவ்

Sun Feb 05, 02:28:00 AM PST  
Blogger sathesh said...

நித்தியா..
மனித சமுதாயத்தின் மிகக்கொடூரமான அவலம் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை...இந்த அவலம் ஏற்படுத்திய பாதிப்பில் ஆற்றாமையில் சினத்தில் உமிழ்ந்தவை இவை...எழுந்த உணர்வை அப்படியே கொட்டிவிட்டேன்.. கவிதையின் வார்த்தைகள் வடிவம் எதைப்பற்றியும் சிந்திக்காமல்...

Sun Feb 05, 02:54:00 AM PST  
Anonymous Anonymous said...

mm.. luv this thoughts ))

Fri Dec 11, 02:51:00 PM PST  

Post a Comment

<< Home