Saturday, May 13, 2006

விதைக்குள் சிறையென்ன...

கனவின்றி வாழ்க்கையில்லை
கனவிற்குள் வாழ்க்கையில்லை
கனவொன்றே வாழ்க்கையில்லை

உன்னை உணர்ந்து
மனதை அகழ்ந்து
உழுது
கனவை விதைத்து
வியர்வை தெளித்து
பாரு

உனதான வாழ்க்கைக்கு நீ
உன்
சுவடாலே பாதையிடு

ஏங்கினால்...
தீருமா...
ஏங்கினால் நீகொண்ட
தாகம் தீர்ந்திடுமா
ஏக்கத்தில் தீர்ந்திடுமா
உன் ஆயுள்...

விதைக்குள் சிறையென்ன
மண்ணை
நீவெல்ல வா!

4 Comments:

Anonymous Anonymous said...

அழகான கவிதை..

நேசமுடன்..
-நித்தியா

Thu May 18, 02:40:00 AM PDT  
Blogger sathesh said...

நன்றி நித்தியா

Thu May 18, 09:21:00 AM PDT  
Blogger Raghavan alias Saravanan M said...

நல்லதொரு கவிதை நண்பரே..

//கனவின்றி வாழ்க்கையில்லை
கனவிற்குள் வாழ்க்கையில்லை
கனவொன்றே வாழ்க்கையில்லை//

அசத்தல் வரிகள்..

ஆனாலும் ஒரு கருத்துச் சொல்ல விழைகிறேன்..

கனவு சில சமயங்களில் நிகழ்கால வாழ்விற்கு ஆதாரம். (தங்களின் மூன்றாவது வரி இங்கு கருத்திற் கொள்ளப்படவில்லை).

//கனவிற்குள் வாழ்க்கையில்லை//

இவ்வரிக்கு, சிலர் கனவில் மட்டுமே (கனவிலாவது என்றெண்ணி) பல கோட்டைகளைக் கட்டி வாழ்கிறார்களே.. அது காதலாகட்டும், கல்யாணமாகட்டும்..

(என்னைப் போன்ற இளைஞர்கள் சிலர் கனவில் காதலித்துக் கவிதை என்ற பெயரில் சில உணர்வுகளை எழுத்தாய் வடிக்கிறோமே அப்பொழுது சத்தியமாய் வாழ்ந்து விடுகிறோம் ஐயா..

எனில், கனவிற்குள் வாழ்க்கையில்லை என்பது சற்றே விதிவிலக்குக் கொண்டதாய்த் தான் இருக்கிறது!! இல்லையா?

Sun Aug 06, 11:53:00 PM PDT  
Blogger -ganeshkj said...

வாங்கி வைத்தும் படிக்காத புத்தகங்கள் போல ஆகிவிடுகின்றன, செயல்படுத்தாத கனவுகள் !! அதே சமயம் நிஜங்கள் தந்த வலியினில் பிறக்கும் கனவுகள் வாழ்க்கையின் வெற்றிக்கு ஆதாரமாகவும் இருக்க நேரும். இந்த line of thought-ல் என்னுடைய ஒரு பழைய நீண்ட கவிதை..

http://kavidhai-pakkangal.blogspot.com/2006/08/blog-post_115565120573380540.html

Tue Feb 06, 04:34:00 PM PST  

Post a Comment

<< Home