Tuesday, February 28, 2006

நீயாகிய நீ!

நீயான வெளியில்
நீயான மண்ணில்
நீயான செடி பூத்த
நீயான மலர் பறித்து
நீயெனப்படுஞ் சிலைக்கு
நீயாகிய மனிதன்
பூஜித்துத் தொழுகிறான்
தன்னை!

(வேறு)

நீ
உன்னில்
உன்னால்
உனைக் கொண்டு
உனக்கே
செய்வதேன் பூஜை!
தொழுது கொள்வதேன்
உன்னை!
வேடிக்கைதான்
நீயேயாகிய நீ!

13 Comments:

Blogger Unknown said...

மீண்டும் வருக பாழ், நல்லாயிருக்கு இந்தக் கவிதை.
ஆமா எங்கே காணாமல் போயிட்டீங்க?

Tue Feb 28, 09:23:00 PM PST  
Blogger sathesh said...

நன்றி தேவ்...

//ஆமா எங்கே காணாமல் போயிட்டீங்க?//
என்னுள் தொலைந்திருந்தேன்...

Wed Mar 01, 07:31:00 PM PST  
Blogger inlivenout said...

Paazh,what is your profession? Just curious.

Sun Mar 12, 01:22:00 PM PST  
Blogger sathesh said...

ILO:
// Paazh,what is your profession? Just curious.//

Flash designer and developer...im basically working on developing educational games and flash extension tools...

Mon Mar 13, 11:18:00 AM PST  
Blogger வித்யாசாகரன் (Vidyasakaran) said...

என்னைத் தொழுகிறேன்தான்.
அதன் முன்,
முன்னிற்கும் என்னில்,
நானாகிய என்னால்
செய்யவும்,
அறியவும் இயலாதன,
நான்
செய்யவும்,
அறியவும் விரும்புவன,
கண்டும், கேட்டும்,
அறிந்தும், அறியாமலும் அஞ்சுவன
அனைத்தையும் ஏற்றுவது கண்டிலையோ?
இனி,
நானும் நானோ?
என் முன்னிற்பதுவும் நானோ?

- வித்யா

Tue Mar 14, 05:26:00 AM PST  
Blogger sathesh said...

வருகைக்கு மிக்க நன்றி வித்யாசாகரன்

உங்கள் கவிதை ரொம்ப நல்லாயிருக்கு,
இந்த கவிதைக்கான பின்னூட்டம் உங்கள் பதிவில் இட்டுள்ளேன்...

Wed Mar 15, 01:11:00 AM PST  
Anonymous Anonymous said...

நான் மட்டும் மிஞ்சிப்போனேன்

நன்றாக உள்ளது.. பாழ்..

நேசமுடன்..
-நித்தியா

Mon Mar 20, 06:02:00 AM PST  
Blogger sathesh said...

மிக்க நன்றி நித்தியா

Tue Mar 21, 11:54:00 PM PST  
Anonymous Anonymous said...

எனக்கு எதுவும் புரியவில்லை.
ஆனால் ஏதோ ஒரு தத்துவத்தை சொல்கிறீர்கள் என புரிகிறது
விளக்கினால் நன்றாக இருக்கும். புரிந்து கொள்ள ஞானம் போதுமா எனத் தெரியவில்லை.

சில மனிதர்கள் உங்களை போல் சிந்திப்பது (வாழ்க்கையைப் புரிந்து கொள்ள சிந்திப்பது) மகிழ்ச்சியை அளிக்கிறது.

-சக்தி

Fri Mar 31, 07:38:00 AM PST  
Blogger sathesh said...

தங்கள் வருகைக்கு நன்றி சக்தி!

எல்லாமும் கடவுள், கடவுள் முழுமையானவன் எனில், கடவுள் என்பது என்னையும் சேர்த்துதான்,எனவே கடவுளை பூஜிக்கையில் நான் என்னையும் பூஜிக்கிறேன், கடவுளை தொழுகையில் என்னையும் தொழுகிறேன்...

இது படைப்பை பற்றிய ஒரு பார்வை, அவ்வளவுதான்...

Sat Apr 01, 12:06:00 AM PST  
Anonymous Anonymous said...

மிக அருமையான கவிதை.
விளக்கத்திற்கு நன்றி

-சக்தி

Tue Apr 04, 10:28:00 AM PDT  
Blogger sathesh said...

நன்றி சக்தி

Tue Apr 04, 12:08:00 PM PDT  
Anonymous Anonymous said...

hm... good text ))

Fri Dec 11, 01:37:00 PM PST  

Post a Comment

<< Home