Monday, February 06, 2006

என்னுள் நீ!

சில காலம்
உன்னை
சிந்தித்ததே இல்லை
சிந்தித்தபோது
ஏற்பதா மறுப்பதா
தெரியவில்லை

தெரிந்தபோது

ஏற்கவில்லை
மறுக்கவுமில்லை

காலம் மாற

நான் மாற
என்னுள் நீயும்

நேசித்தேன்

நிந்தித்தேன்
பித்தனாய் உன்
நினைவில் அலைந்தேன்

வாழ்வின் துன்பங்கள்
தந்த இரணத்தில்
உன்னை
ஏசி உமிழ்ந்தேன்
நீ
இருந்தாலும்
இல்லாமல் போனாலும்
இனி கவலையில்லை
என்றே
தூர எரிந்தேன்

ஆறுதல் இல்லா
போதுகளில்
அமைதியற்று திரிகையில்
தேடி களைத்து
சோர்ந்து விழும் போதெல்லாம்
வேறெங்கே
உன் மடிதேடி விழைந்தேன்
குழந்தையாய் குழைந்தேன்
உனக்கு மட்டுமே
புரியும்படி
நீ மட்டுமேஅறியும்படி
உடல் கரைய
உள்ளம் கரைய
நான் தொலைய
அழுதேன்

போடா! பரமா!

உன்னை எனக்கு
நேசிக்கவும் தெரியவில்லை
வெறுக்கவும் தெரியவில்லை

நீ படைத்த பிழைகளை
ஏற்கும் பக்குவம்
எனக்கில்லை
உன்னை தவிர்த்து
வாழவும்
வலிமை எனக்கு
போதவில்லை

உனக்கென்ன

நான்
நல்ல வேடிக்கைதான்
வேறு கதியில்லை என்று
உள்ளம் குமுற
உன்முன் வந்துவிழுவது - உனக்கு
நல்ல கேளிக்கைதான்!

7 Comments:

Blogger Unknown said...

I would rate this as one of your best till date

Tue Feb 07, 05:24:00 AM PST  
Blogger sathesh said...

நன்றி தேவ்

Tue Feb 07, 08:29:00 AM PST  
Blogger sathesh said...

தங்கள் எண்ணத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஆர்த்தி

Thu Feb 09, 07:04:00 AM PST  
Blogger sathesh said...

மிக்க நன்றி feman

>> நண்பரே...உங்களின் வெகுவார்ந்த கவிதைகள் ஆன்மீக சாயலிலேயெ அமைவது ஏன்?

வறுமையின் நிறம் சிவப்பு திரைப்படத்தில் ஒரு காட்சி: தொலைந்த தன் புகைப்படத்தை குப்பைத்தொட்டியில் தேடிக்கொண்டிருக்கும் கதைநாயகன் அதில் நிறைய சாத்துக்குடி தோல் இருப்பதை பார்த்து இங்கே பணக்காரர்கள் அதிகமோ என்பதாய் கேட்க இல்லை இங்கே நோயாளிகள் அதிகம் என்பதாய் பதில் வரும்...

Thu Feb 09, 07:32:00 AM PST  
Anonymous Anonymous said...

:-) :-)
அருமை பாழ்..!

நேசமுடன்..
-நித்தியா

Sat Feb 11, 04:57:00 AM PST  
Blogger sathesh said...

நன்றி நித்தியா

Sat Feb 11, 11:56:00 PM PST  
Blogger பாலு மணிமாறன் said...

I fell in to the trap by thinking it as " another kaathal kavithai"

but - at the end i was bowled over!

Sun Feb 19, 08:09:00 AM PST  

Post a Comment

<< Home